I❤️காரைக்குடி
16 Dec 2022
காரைக்குடியில் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போன இரண்டு சிறுமிகள் போலீசாரின் துரித நடவடிக்கையால் கண்டுபிடிக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அவர் அவரது தோழியுடன் சேர்ந்து திடீரென மாயமாக்கினார்.
அதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை விரைந்து காரைக்குடி உதவி கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் புகார் தெரிவித்தார். நேற்று மாலை சுமார் 3.30 மணி அளவில் புகார் தெரிவிக்கப்பட்டது.
புகாரை பெற்றுக் கொண்ட காவல் உதவி கண்காணிப்பாளர் உடனடியாக சிறுமியின் வீட்டுக்குச் சென்று பெற்றோர் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டார். ஆனால் பெற்றோர் இருவருக்கும் போதிய விவரம் தெரியாததால் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
பின்னர் அவர் அவர்களின் செல்போனையும் ஆய்வுக்கு உட்படுத்தினார். அப்போது வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியிடம் இருந்து அவரது தாயாருக்கு புதிய செல்போன் எண் மூலம் கால் வந்தது.
அந்த எண்ணைக் கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அந்த சிறுமிகள் இருவரும் தூத்துக்குடியில் அவர்கள் இன்ஸ்டாகிராமில் பழகிய ஆகாஷ் என் இருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் சென்னை செல்ல பேருந்தில் பயணித்துக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.
உடனடியாக காவல் உதவி ஆய்வாளர் தூத்துக்குடி காவல் நிலைய ஆய்வாளர் ஜோஸ் என்பவரை தொடர்பு கொண்டு சிறுமிகளை மீட்க கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் சிறுமிகள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டு எட்டயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர் சிறுமிகள் இருவரும் காரைக்குடிக்கு அழைத்து வரப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். நேற்று மாலை 3.30 மணி அளவில் புகாரை பெற்று இரவு 7.30 மணிக்கு சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
சுமார் 4 மணி நேரத்தில் சிறுமிகளை கண்டுபிடிக்க விரைந்து செயல்பட்ட காரைக்குடி வடக்கு காவல் ஆய்வாளர் ராஜ்குமார், உதவி ஆய்வாளர் பூர்ண சந்திரா மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்களுக்கு உதவி கண்காணிப்பாளர் ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினார்.
சிறுமிகள் இருவர் வீட்டை விட்டு வெளியேறி மாயமாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு சிறுமிகளை மீட்ட காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.