top of page
Search

காரைக்குடி

Updated: Dec 7, 2022

காரைக்குடி (ஆங்கிலம்:Karaikudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். "செட்டிநாடு" என்றும் கல்வி நகரம் அழைக்கப்படும் பிரதேசத்தின் பகுதியாகும். சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டு, காரை வீடுகள் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த வீடுகளின் அடிப்படையில், காரைக்குடி தமிழக அரசால் பாரம்பரியமிக்க நகரென அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறந்த கல்வி நிறுவனங்களான அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI) அமையபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டு உள்ளது.

காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும், காரைக்குடி கீழ்பட்டுள்ளது. நகரானது 13.75 சதுர கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய காரைக்குடி நகராட்சியினால் நிர்வகிக்கப்படுகின்றது. 2011ஆம் ஆண்டைப் பொறுத்தவரை காரைக்குடியின் மக்கள் தொகை 1,06,714 ஆகும்.போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் சாலை வழிப் போக்குவரத்தே முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றது என்றபோதிலும், காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை சாலை ரயில் நிலையம், கோட்டையூர் ரயில் நிலையம், கண்டனூர் ரயில் நிலையம் ஆகியவை, காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற மக்களின் போக்குவரத்து தேவைக்கு இன்றியமையாததாக விளங்குகின்றன. மேலும், காரைக்குடி நகரிலிருந்து 97.2 கிலோமீட்டர் தொலைவில், மதுரை விமான நிலையமும் மற்றும் 83.6 கிலோமீட்டர் தொலைவில், திருச்சிராப்பள்ளி விமானநிலையமும் அமைந்துள்ளன.




 
 
 

Comments


bottom of page